கொழும்பு நகரில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கும்பல்: சகோதரர்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மேற்கொண்ட தாக்குதலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கரகஹமுன பகுதியில் நேற்று இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறிய லொறி ஒன்றில் இந்த கும்பல் வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டில் இருந்த இருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் தாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கடவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சகோதர்கள் மீது தாக்குதல்
காயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
25 மற்றும் 29 வயதுடைய இரண்டு சகோதரர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
