பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு
பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல வெற்றிடங்கள்..
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன், துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், சில பல்கலைக்கழகங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கது.