மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்
ரம்புக்கனை - எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவால் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே விபத்தில் சிக்கியுள்ளார்.
மாணவனின் நிலைமை கவலைக்கிடம்
இன்று காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri