பல்கலைக்கழக மாணவியொருவர் திடீரென உயிரிழப்பு
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட மாணவியொருவர் காய்ச்சல் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 21 வயதான ககுலி காவ்மினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல்
அனுராதபுரத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு அக்மீமனாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று அதிகாலை (26) எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவி தனது குடும்பத்துடன் காரில் அனுராதபுரத்திற்கு சென்று, புனித யாத்திரையை முடித்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகத் தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.