சுழிபுரம் கல்வி நிலைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
சுழிபுரம் கல்வி நிலையத்தில் கல்வி கற்று பல்கலைக்கழக பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும், க.பொ.த. உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் சுழிபுரம் கலைமகள் இலவசக்கல்வி நிலைய ஓய்வு நிலை அதிபர் ச. இராமலிங்கம் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (16.06.2024) மாலை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கல்வி நிலைய மாணவர்களால் கலை நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக பட்டங்கள்
மேலும், அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் 3 ஏ சித்திகளை பெற்ற ஞானேஸ்வரன் கிந்துஷா மற்றும் கல்வி நிலையத்தில் பழைய மாணவர்களாக அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் சிறப்பு வணிக நிர்வாகமானி பட்டத்தினை பெற்ற சித்திரசேனன் ராகவன் மற்றும் கலாசார சுற்றுலாத் துறையில் சிறப்பு பட்டத்தினை பெற்ற இராசரத்தினம் தர்ஷன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், கௌரவ விருந்தினர்களாக, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பரா. நந்தகுமார், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |