யாழில் இருந்து வீடு திரும்பிய பல்கலைக்கழக பேராசிரியர் : பரிதாபமாக உயிரிழப்பு
களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவர், மூத்த விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்த குணேந்திரா விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.
நேற்றிரவு (18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam