யாழில் வெளிநாட்டு வீசா மோசடி: பல்கலைக்கழக அலுவலர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள், வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்ட விசாரணையின்போதே யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக மேற்படி பல்கலைக்கழக ஊழியரே காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆறு கோடி ரூபா
அந்தப் பெண் பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை தற்போது கைதாகியுள்ள சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியமை பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விசேட குற்ற விசாரணை பிரிவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
