களனி பல்கலைக்கழகத்தில் இரவு நேரங்களில் நடக்கும் சம்பவங்கள்! துணைவேந்தரின் பகிரங்கம்..
களனி பல்கலைக்கழகத்தில் விழாக்கள், பயிற்சிகள் என்ற பெயரில் பகிடிவதைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா நேற்று (18.02.2026) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதனாலே களனி பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 10.00 மணிக்குப் பின்னர் மாணவர் செயற்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறான விழாவிற்கு இதுவரை எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.இவ்விடயத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்:
விழாக்களின் பெயரில் நடைபெறும் பகிடிவதைகள்
ஒரு விழா நடத்தப்போவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த விழாவிற்காக பல மாதங்களாக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை பலவந்தமாக மாணவர் மையத்திற்குக் கொண்டு வந்து இரவு முழுவதும் தங்கவைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
மாணவர்களை அழைத்து நடனம், பாடல் போன்றவற்றிற்கு பயிற்சி அளிக்கிறார்கள். அழைப்பிதழ்கள் தயாரிக்கவும், விளம்பரங்கள் உருவாக்கவும் மாணவர்களை அழைத்துள்ளனர்.
அங்கு பகிடிவதைகள் நடைபெறுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எமது அதிகாரிகள் மாணவர் மையத்திற்குச் சென்றபோது அவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இவ்வாறு பேச உரிமை இல்லை.

இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. வைஃபை , மின்சாரம், நீர், தங்கும் வசதி அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது களனி பல்கலைக்கழகத்தில் 16,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
மாணவர்கள் தரமான கல்வியைப் பெற நாம் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். எந்தத் தொந்தரவுமின்றி உயர்தர கல்வி வழங்குவது எங்களது பொறுப்பு. விழாக்கள் நடத்துவதன் பேரில் சில மாணவர்கள் நள்ளிரவைத் தாண்டியும் மோசமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam