யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நியமனம்! பேரவை அனுமதி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று சனிக்கிழமை(25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர்
பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத்
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan