பல்கலைக்கழக ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு
புதிய இணைப்பு
இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கும் தடை விதித்து நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவவலை அடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனுலா வித்தியாலாயம், புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி, புனித ஜோன்ஸ் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி ஆகியவை கல்வி பொது தராதர சாதாரண தார பரீட்சை மையங்களாகவும், பிரதான வீதிக்கு அருகாமையில் அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருவதாலும் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று பிற்பகல் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
