போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

University of Moratuwa
By Kamal Sep 01, 2026 02:47 PM GMT
Report

அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இல்லங்கசிங்க எச்சரித்துள்ளார்.

போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் | University Lecturers To Protest

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான தீர்வு யோசனைகள் மற்றும் கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சாருதத்த இல்லங்கசிங்க தெரிவித்தார்.

எனினும், பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகளையோ அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கல்விப் பணியாளர்கள் பெருமளவில் வெளியேறி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆண்டுக்கு சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போது, 5,800 விரிவுரையாளர்கள் பணியில் இருந்தனர். ஆண்டு மாணவர் சேர்க்கை 45,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், சுமார் 1,000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில கல்விப் பணிகளுக்கான பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரிவுரையாளர்கள் முன்வருவதில்லை.

அரசுப் பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சி என்பது நாட்டின் எதிர்காலத்தின் வீழ்ச்சியாகும் என சாருதத்த இல்லங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி அலுத்துவிட்ட நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார்.

அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் எனவு, தேவைப்படின் போராட்டங்கள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US