இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின் புத்தாக்கப் போட்டியில் யாழ்.பல்கலை முதலிடம்
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது.
மாணவர்களிடையேயான புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையில் இலங்கை பொறியியல் கல்வி நிறுவகம் The Institution of Engineers Sri Lanka (IESL) நடாத்திய இளமாணி மாணவர் புத்தாக்கப் போட்டியில் (Undergraduate Inventor of the Year - UIY ) யாழ்ப்பாண இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தின் யாழ். பல்கலைக்கழக பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட உணவுக் கழிவுகளில் இருந்து லஞ்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் பொறி ( Lunch Sheet Separator from food waste) முதலாம் இடத்தைப் பெற்று பிரபலமான கண்டுபிடிப்புக்கான விருதுக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் வெற்றியாளர் தெரிவுக்கான நடுவர்களாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கு கொண்டிருந்தனர்.

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan