விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்
கண்டி, கடுகண்ணாவையில் உள்ள ஊரபொல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரி மோதியதில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கடந்த 28 ஆம் திகதி இரவு நடந்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியை சேர்ந்த 24 வயதான திவங்க பியதிஸ்ஸ எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலேயே பலி
அவர் தனது மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கொழும்பு நோக்கிச் சென்ற வாகனங்கள் ஏற்றிச் சென்ற லொரியுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக கடுகண்ணாவ பொலிஸார் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரியின் 24 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் உடல் பேராதனை போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.



