இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழிதான் பேரணி! - அமீர் அலி
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களுக்கான நீதி கோரிய பயணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பயணம் எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்ட பயணமாக இருக்க வேண்டும் இந்தப் பயணத்தில் தமிழ்த் தலைவர்கள் மீது முஸ்லிம் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டிய காலகட்டம் வந்துள்ளது என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழி தான் இந்த நிகழ்ச்சி நிரல். எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் தமிழர்கள் முஸ்லிம்கள் என்று வேறுபடுத்தும் ஆட்சியாளர்களுக்கு துல்லியமாக பதில் சொல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலவரத்தை ஏற்படுத்தியவர்களும் அவர்கள் தான். அருவருப்பாக இந்த வீதியில் இறங்கி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியவர்கள் ஆட்சியாளர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri
Starlink சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்திய ஈரான்: கொந்தளித்த எலான் மஸ்க் News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri