ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் முல்லைத்தீவுக்கு விஜயம் (Photos)
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க முல்லைத்தீவுக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு
ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்திற்கு சென்று அங்கு மக்களுடன் கலந்துரையாடலில்
ஈடுபட்டுள்ளதுடன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளார்.
ஊடக சந்திப்பு
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மக்கள் சந்திப்பொன்றிலும் ஈடுபட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரன் ஆலயத்தில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான
அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி, உதவி அமைப்பாளர் எஸ். சத்தியசுதர்சன்,
வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சனி ஆகியோர் கலந்து
கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
