திருப்பதிக்கு மஹிந்த சென்ற ஜெட் விமானத்தால் சர்ச்சை! மேலும் பல தகவல்கள் அம்பலம்

Sri lanka Sajith Premadasa Press Meet Manusha Nanayakkara Mahinda rajapaksha Tirupadi
By Benat Dec 31, 2021 09:55 PM GMT
Report

தனியார் ஜெட் விமானத்தில் பிரதமர் திருப்பதிக்குச் சென்ற வருடம் என்ற அடிப்படையிலும் 2021 முக்கியத்துவம் பெறுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் திருப்பதிக்கு தனியார் ஜெட் விமானம் மூலம் பயணித்த விவகாரம் பாரிய சர்ச்சைகளை அரசியல் பரப்பில்  தோற்றுவித்துள்ளது.

குறித்த விமானம் தொடர்பில் பல தகவல்கள்  தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

குறித்த ஜெட் விமானம் தூதுவர் கனநாதனுக்குச் சொந்தமானதா? ஆமெனில் அதனைக் கொள்வனவு செய்வதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? ஆகிய விடயங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இரசாயன உர இறக்குமதித்தடையினால் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சமையல் எரிவாயு சிலிண்டர் சார் வெடிப்பு சம்பவங்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, பொருட்களுக்கான விலையேற்றத்தினால் வாழ்க்கைச்செலவு உயர்வு, பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளடங்கலாக பொதுமக்கள் மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த 2021 ஆம் வருடம் தற்போது முடிவிற்கு வந்திருக்கின்றது.

ஆனால் இந்த நெருக்கடிகளின் அடுத்தகட்ட விளைவுகள் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி தோல்வியடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் கடந்த வருடம் 'சேர் பெயில்' என்று கூறினோம். ஆனால் இவ்வருட முடிவில் தனது செயலாளர், ஏனைய அரச கட்டமைப்புக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் தோல்வியடைந்திருப்பதாக ஜனாதிபதியே கூறத்தொடங்கியிருக்கின்றார்.

ஆகவே ஜனாதிபதியின் தோல்வியே ஏனைய அதிகாரிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

தனியார் ஜெட் விமானத்தில் பிரதமர் திருப்பதிக்குச் சென்ற வருடம் என்ற அடிப்படையிலும் 2021 முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக புதிய கார் அல்லது ஏதேனும் வாகனங்களை வாங்கினால் கதிர்காமத்திற்குச் செல்வது வழமையாக நடைபெறும் விடயமாகும். இருப்பினும் சிலர் அவர்களது இயலுமைக்கு ஏற்றவாறு திருப்பதிக்கும் சென்றுவருவார்கள்.

ஏனெனில் இந்த ஜெட் விமானம் சென் மெரினோ இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலிக்கு அண்மையிலுள்ள இந்த நாட்டில் பணத்தை இரகசியமாக மறைத்து வைக்கமுடியும் என்பதுடன் கடந்த காலங்களில் சிலர் இத்தாலிக்குச்சென்று திரும்பும்போது சென் மெரினோ இராச்சியத்திற்கும் சென்று வந்ததாக எமக்கு அறியக்கிடைத்தது.

ஆனால் இந்த ஜெட் விமானம் உகண்டாவின் தூதுவராக இருந்த கனநாதன் என்ற நபரின் ஊடாகவே நாட்டை வந்தடைந்திருக்கின்றது.

இது பரிசாகக் கிடைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், குறித்த ஜெட் விமானம் பரிசாகக் கிடைத்ததா? அல்லது திருப்பதிக்கான ஜெட் விமானப்பயணம் மாத்திரம் பரிசாகக் கிடைத்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமாத்திரமன்றி குறித்த தூதுவருக்கு எவ்வாறு ஜெட் விமானம் கிடைத்தது? இது அவருக்குச் சொந்தமானது என்றால், அதற்கான நிதி எவ்வாறு கிடைத்தது? இவை தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

இது இவ்வாறிருக்கையில், நாடு நெருக்கடியில் இருப்பதால் டுபாய் விஜயத்தை இரத்துச்செய்வதாகப் பிரதமர் கூறுகின்றார். அவ்வாறெனின் திருப்பதி விஜயத்தின்போது அதனை அவர் உணரவில்லையா?

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களைப் பார்த்து 'இப்போது சுகமா?' என்று கேட்கமாட்டோம். மாறாக கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மக்களின் பிரச்சினைகளுக்கு அவசியமான தீர்வைப் பெற்றுக்கொடுத்து, நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான தெளிவான வேலைத்திட்டத்துடன் 2022 ஆம் ஆண்டை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அதுமாத்திரமன்றி நாட்டின் ஆட்சிமாற்றமொன்றை முன்னிறுத்தி மக்களனைவரும் ஒன்றிணையும்போது அதற்கு நாம் உரியவாறான தலைமைத்துவத்தை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US