தம்முடன் இணைந்து செயற்படுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு
தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
மாவனல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேர்தலின்போதும் வேட்டையாடப்பட்டனர்.
தேர்தலின் பின்னரும் அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.எனவே அவர்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதே மரியாதையைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்கால தேர்தலில் இணைந்து செயற்படும் நோக்கில் அந்தக்கட்சியுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத்தலைவர் ருவன் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam