சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக களமிறங்கிய ஐ.நா! அநுரவுக்கு வந்த அவசரக் கடிதம்
அரசப் புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், 2026 பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை மற்றும் நீண்டகால தடுப்புக்காவல் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சலேவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் இலங்கை அரசிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக விசாரணைக்கு, ஒத்துழைக்காமல் செயற்பட்டு வரும் சுரேஷ் சலேவுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பல மனித உரிமை நிபுணர்கள் எடுத்துள்ள இந்நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,