தொடர் இழுபறியில் ஹோர்முஸ் நீரிணையை திறக்கும் நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரான் முன்வைத்துள்ள யோசனைகள் போதுமானதாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், 'டைம்' (Time) சஞ்சிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஈரானின் பொருளாதார நிலைமை பெருமளவில் சரிவைச் சந்தித்துள்ளதாகவும், அதனால் அவர்கள் உடன்பாடடிற்கு வர விரும்புவதாகவும் குறிப்பிட்ட அவர், தாம் ஒரு உண்மையான ஒப்பந்தத்தையே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சாத்தியக்கூறுகள்
அத்துடன், ஈரானிடம் அணுஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி, தேவைப்பட்டால் ஈரான் முழுமையாக அழிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிடம் தங்குதடையின்றி போதிய ஆயுத இருப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவை ஏனைய நட்பு நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது தமது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், ஈரானுடன் தகுந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதும் உலகளவில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.