ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! ஈழத்தமிழர்களுக்குள்ள வாய்ப்பு..
ஜெனிவாவின் 60ஆவது கூட்டத்தொடரில் மனிதஉரிமை பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்' தொடர்பான தீர்மானம் ஒன்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய தீர்மானம் மூலம், சர்வதேச மேற்பார்வை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நீடிக்கப்பட்டுள்ள இரண்டுவருடங்களையும் தமிழர் தரப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி வைஷ்ணவி தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
ஏற்கனவே இருந்த தீர்மானத்திலிருந்த சில சொற்பதங்கள் தற்போதைய தீர்மானத்தில் நீக்கப்பட்டுள்ளது.
ethnic conflict என்ற இனப்பிரச்சினை தொடர்பான வார்த்தை நீக்கப்பட்டிருப்பது என்பது தமிழர் தரப்பிற்கு ஒரு பலவீனமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
இராணுவமயமாக்கல் என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளதுடன் ஈழத்தமிழர்கள் என்று எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் இவற்றை தமிழர்கள் எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பது தான் தற்போதுள்ள கேள்வியாக உள்ளது என குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுமையான தகவல்களை காண கீழுள்ள காணொளியை காண்க..





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
