ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டங்கள் குறித்து ஆராய்வு (Photos)
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் (06.05.2023) வவுனியா - மில் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, கட்சியின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும் மாவட்ட மட்ட கட்டமைப்பைப் பலப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள்
மேலும், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மாவட்ட மட்டத்தில் மறுசீரமைத்து மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற
வேட்பாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும்
கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri