ஐக்கிய தேசிய கட்சியைக் கலைத்துவிடுமாறு முன்மொழிந்தாரா ரணில்...!
கடந்த தேர்தல்களில் அவமானகரமான இழப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியைக் கலைத்துவிட அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததாக முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சி மூத்தவர்களுடன் விக்ரமசிங்க பல கலந்துரையாடல்களைக் கொண்டிருந்ததாகவும் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் கட்சி தொடர வேண்டும் என்று விரும்பினர், அதில் தாமும் ஒருவன் என்று நவீன் தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கவை பயன்படுத்த முடியாது
இந்தநிலையில், தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராக இருப்பது கட்சிக்கு ஒரு பெரிய சொத்து என்றும், விக்ரமசிங்க ஒரு நல்ல தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன, உயிர்வாழ்வதற்காக ரணிலை பயன்படுத்துகிறாரா என்று கேள்விக்குப் பதிலளித்த நவீன் திசாநாயக்க, தனது அனுபவத்தில் யாரும் விக்ரமசிங்கவை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒருவர், அவர்கள் அவரைப் பயன்படுத்துவதாக உணரலாம், ஆனால் அவர், அவர்களை
மிகவும் தொழில்நுட்பமான முறையில் பயன்படுத்துகிறார் என்றும் திசாநாயக்க
கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
