ஐ.நா பிரதிநிதிகளுக்கும் யாழ். முதல்வருக்கும் இடையில் சந்திப்பு (Photos)
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா குழுவினர், மாநகர சபை
முதல்வரை நேற்று சந்தித்தவுடன் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் காணப்படும் முரண்பாடான கொள்கைகள்
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தத்தின் பின் நாட்டில் பல சொத்துக்கள் சேதம் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் எமது நாட்டிலே முதலீடுகளை கொண்டு வருவதற்கு முன் வருகின்ற போதிலும் எமது நாட்டில் உள்ள முரண்பாடான கொள்கைகள் காரணமாக அவர்கள் தமது முதலீட்டை மேற்கொள்ளாத நிலை காணப்படுகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கல்
மேலும் தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது பயங்கரவாத தடை சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் விடயத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக” யாழ். முதலவர் தெரிவித்துள்ளார்.



Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan