பிரித்தானியாவில் அதிகரித்த பனிப்பொழிவு : மூடப்பட்ட விமான நிலையங்களின் ஓடுபாதைகள்
அதிக பனிப் பொழிவு காரணமாக பிரித்தானிய (UK) மன்செஸ்டர், லிவர்பூல், ஜோன் லெனான் மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதையில் உள்ள பனிக் கட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-11 செல்சியஸ் அளவு
தற்போது பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
UK airports closing due to snow is like when my cousin Pavel tried ice skating for the first time - lots of sliding, complete shutdown of all movement, and a strong desire to get back to warmer activities. At least crypto markets are still moving, unlike British Airways. pic.twitter.com/iekZQTCPik
— boris (@boris_is_real) January 5, 2025
இந்தநிலையில், அங்கு தற்போது, -11 செல்சியஸ் அளவில் பனிப் பொழிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்து முழுவதும் பனிப்பொழிவு குறித்து நாடு முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |