ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கன மழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில்(United Arab Emirates) இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் கனமழை பெய்து வருகின்ற நிலையில் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழையுடன் இடி, மின்னல் ஏற்பட கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆன்லைன்(online) வழி கல்வியை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், பீச்சுகள் ஆகியவை தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன.

தேவையின்றி வாகன பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டள்ளமையினால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால், நீர் தேங்கி காணப்படும் சூழலில், விபத்துகளை குறைக்கும் நோக்கில் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri