ரணிலுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளர் அசங்க பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இவர் இன்று (13.02.2024) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் மகனாவார்.
நல்லாட்சியின்போது அமைச்சுப் பதவி
காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியில் தவிசாளர் பதவியை வகித்தவர்.
நல்லாட்சியின்போது அமைச்சுப் பதவியையும் வகித்தார். கடந்த பொதுத்தேர்தலிலும் போட்டியிடாத நிலையில், தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குருநாகல் சென்றிருந்தபோது, காமினி ஜயவிக்ரம பெரேராவைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இவ்வாறிருக்கையிலேயே, அசங்க பெரேரா ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



