அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள தொழிற்சங்கத் தலைவர்கள்

Srilanka Covid Gotapaya
By Dhayani May 30, 2021 09:58 PM GMT
Report

கொடிய கோவிட் தொற்று நோயின் போது தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, மூன்று மாதங்களாக கூட்டப்படாத நிலையில் இது குறித்து கவலை வெளியிட்டுள்ள, தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு வார காலத்தில் குறித்த குழுவைக் கூட்டாவிட்டின் சுயாதீனமான ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் தொற்றுநோய் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முத்தரப்பு நடவடிக்கைக் செயலணி மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஐந்து தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு எழுத்து மூலமான அறிவிப்பை விடுத்துள்ளன.

தினேஷ் குணவர்தன தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், அவர் தலைமையில் முதலாளிமார், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைச்சினை உள்ளடக்கியதாக முத்தரப்பு செயலணி உருவாக்கப்பட்டது.

தொற்று நோயின் மூன்றாவது அலை விரைவாக பரவுவதற்கு ஆடைத் தொழிற்துறை மாறியுள்ள நிலையில், கடந்த வாரம் ஆடைத் தொழிலாளர்கள் மத்தியில் இரண்டாவது மரணம் நிகழ்ந்ததை தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போதைய தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வாவை நினைவுபடுத்தியுள்ளனர்.

மேலும், சுதந்தில வர்த்தக வலயங்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளில் தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

"உள்ளூர் மக்களின் தலையீடு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது." கோவிட் தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களை பலவந்தமாக சேவைக்கு அழைப்பது மிகவும் பாரதூரமான விடயமென்பதை சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், தொற்றுநோய் குறித்த தகவல்களை வழங்கத் தவறியதோடு, நோய் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைத் தொடர்பில், கொக்கலை எஸ்குவல் தொழிற்சாலையின் நிர்வாத்திற்கு எதிராக, சுகாதார பரிசோதகர்களால், காலி மேலதிக நீதவானிடம் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை எடுத்துக்காட்டியுள்ளனர்.

தொழில் ஆணையாளர் நாயகம், தலைமையிலான விசாரணைக் குழு, முத்தரப்பு செயலணியின் தீர்மானங்களை மீளாய்வு செய்ய வாரந்தோறும் சந்திக்க தீர்மானித்திருந்ததாகவும், எனினும், 2021 மார்ச் 3 முதல் சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

"இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் தலைமையின் கீழ் உள்ள முத்தரப்பு செலணியை உடனடியாகக் கூட்டுமாறு கோரப்பட்டது, ஆனால் அது 2021 மார்ச் 3ற்குப் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக கூட்டப்படவில்லை.

தொழிற்சங்க செயற்பாட்டில் உள்ள உறுப்பினர்களாக, நாங்கள் எங்கள் கவலையை இங்கே வெளிப்படுத்துகிறோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறை மற்றும் தோட்டத் துறையின் பணியாளர்களைப் பாதிக்கும் ஓய்வூதிய வயதை விரிவாக்குவது மற்றும் ஊதியக் கட்டளைச் சட்டத்தின் 59ஆவது பிரிவு “ஏ” திருத்தப்பட்டதைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரே அமைப்பான, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கடந்த மார்ச் 18ஆம் திகதிக்கு பின்னர் இரண்டு மாதங்களுக்கு மேலாக இதுவரை கூட்டப்படவில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு கோவிட் தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற கூட்டங்கள் சாத்தியமில்லை என சில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிகின்ற போதிலும், 225 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றக் கூட்டங்களும், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டங்களும் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் செயலணி மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டங்களை கூட்டாமைக்கு என்ன காரணம் என அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனியார் துறை ஊழியர்களைக் கையாளும் ஒரே அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் இயலாமை குறித்து எங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றோம்.

இந்த கடிதத்தைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் முத்தரப்பு செயலணி குழு மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டப்படாவிட்டால், தமது பிரச்சினைகள் குறித்து சுயாதீனமான தீர்மானத்தை மேற்கொள்ளப்போவதாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தின் பிரதி, தொழில் ஆணையாளர் நாயகம், மற்றும் தொழில் அமைச்சின் சர்வதேச உறவுகள் சிரேஷ்ட உதவி செயலாளர் - பி.வசந்தன் வசந்த ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர, சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கை மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலித அத்துகோரல, இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை பொதுச்செயலாளர் சில்வெஸ்டர் ஜெயகொடி மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் லினஸ் ஜெயதிலக உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். 



GalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US