யாழ் யூனியன் கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்க சிலர் முயற்சி - அருட்பணி ஜெயகுமரன்

jaffna polices Union College Tellippalai
By Dias Apr 12, 2021 10:41 PM GMT
Report

தாம் அனைவரும் மனம் வருந்தக்கூடிய வகையில் மாணவர்களை உபயோகித்து திருச்சபை வளாகத்தை கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அமெரிக்க மிஷன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அ.ஜெயகுமரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் குறித்த கருத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை மாணவர்களை தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

யூனியன் கல்லூரி மோதல் மத அடிப்படை கொண்டதல்ல; பழமையை பாதுகாக்க வேண்டும் – கிறிஸ்தவ பாதிரியார்கள் தெரிவிப்பு. வலி.வடக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என யாழ். மாவட்ட அமெரிக்க மிஷன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அ.ஜெயகுமரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் குறித்த கருத்தை முன்வைத்துள்ளார். இதேவேளை மாணவர்களை தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் இதன்போது நேற்றைய தினம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.  

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி உட்பட யாழ்.மாவட்டத்தில் 150 க்கும்மேற்பட்ட பாடசாலைகளை அமெரிக்க மிஷன் நிர்வகித்து வந்தது . 1962 காலப் பகுதியில் அரசாங்கத்தினால் பாடசாலைகள் சுவீகரிக்கும் போது யூனியன் கல்லூரி உட்பட பல பாடசாலைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் எமது நோக்கத்தை அரசாங்கத்திற்கு தௌிவுபடுத்தி எமது குரு முதல்வர்கள் வாழ்ந்த வீட்டினை தருமாறு அரசாங்கத்திடம் கோரியதன் பயனாக அது எமக்கு மீள கிடைத்தது. 1970 ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த பாடசாலை வளாகத்தின் நில அளவைப் படத்தில் குறித்த இல்லம் அமெரிக்கன் மிஷனுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நில அளவை படத்தில் குறித்த இடம் காட்டப்படாததோடு அதிகாரி ஒருவரின் வேண்டுகோளில் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கத்தினால் எமக்கு மீள வழங்கப்பட்ட தற்போது பிரச்சினை உருவாகியுள்ள இல்லம் தொடர்பான ஆவணம் தற்போதும் எம்மிடம் இல்லை. இவ்வாறான நிலை இருக்கும்போது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளையும் யாழ்.அரசாங்க அதிபரிடமும் நாம் சென்று இது குறித்து தெரியப்படுத்தினோம்.

குறித்த இல்லம் எமக்கானது என நிரூபிப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவை எனவும் அதுவரை பாடசாலை சமூகத்தை பொறுமை காக்குமாறு கேட்டிருந்தோம். கடந்த காலங்களில் பாடசாலை அதிபர்களாக இருந்தவர்களுக்கு எமது செயற்பாடுகள் தொடர்பில் நன்கு தெரியும், எம்மோடு நல்ல உறவைப் பேணி இருந்தார்கள்.

தற்போது ஒரு சிலரின் தூண்டுதலினால் மாணவர் சமுதாயம் தவறாக வழி நடத்தப்பட்டுக்கொண்டிருப்பது எமக்கு மன வேதனையைத் தருகிறது. நாம் பாதுகாக்கக் கேட்பது எமது இல்லத்தை மட்டும் அல்ல அது தமிழ் மக்களுடைய வரலாற்றிடம். போர்த்துக்கீசர் காலத்தில் கட்டப்பட்ட மிஷனரிமாரின் கட்டடம் 1816 ஆம் ஆண்டு மீள நிர்மாணிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வமான எமது இல்லம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கிறோம். நாம் எதிர்பார்க்கும் ஆவணம் ஒருவேளை பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றால் முழுமனதுடன் அதனை பாடசாலைக்கு திருப்பிக் கையளிப்போம் என்றார்கள்.


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US