தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கம்
இணைவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் சம்பளத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்யும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யால்வல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துக்கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாகவும் பஞ்ஞாசேகர தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam