போக்குவரத்தை சீர்குலைக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா...! (Video)
அம்பாறை- கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகிவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதிக சத்தம் கொண்ட ஒலி எழுப்பி வீதிகளின் நடுவே தலைக்கவசம் அதிவேகமாக பயணம் செய்து ஏனையோரை அச்சுறுத்தி வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி நாடாளுன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட சிலர் முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர்.
இவ்வாறானவர்கள் வீதி போக்குவரத்து சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக பாடசாலை நாட்கள் மற்றும் அலுவலக நாட்களிலும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையில் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்துக்கும் நடவடிக்கை உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைவதால் குறித்த நபர்களை கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
