அரச ஊழியர்களில் ஒரு தரப்பினருக்கான விசேட விடுமுறை - வெளியாகியுள்ள சுற்றறிக்கை
2026 றமழான் காலத்தில் விசேட விடுமுறை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும், இம்முறை றமழான் மாதம் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முடிவடைய உள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மதவழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வேலைநேர ஒழுங்கு
இக்காலத்தின் போது அவ் உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலைநேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் றமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நிதியச்சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கத் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை