இனந்தெரியாதோரால் குடிசை ஒன்றுக்கு தீ வைப்பு, ஒருவர் பலி - திருமலையில் சம்பவம்
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் குடிசை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு(24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்போபுர பகுதியில் அமைந்துள்ள வயலில் உள்ள குடிசைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் தீ காயங்களுக்குள்ளான நிலையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த டபிள்யு. ஜெயத்திலக்க 46 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இத் தீவைப்பு செயற்பாடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது தானாகவே தீ
ஏற்பட்டுள்ளதா போன்ற விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
