காதலனின் வீட்டில் விருந்திற்கு சென்ற காதலி கொடூரமாக கொலை
குருணாகலில் காதலனின் வீட்டில் மதுபான விருந்தின் போது, அபிவிருத்தி அதிகாரியான காதலி மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாவத்தகம, வேவகெதர பகுதியை சேர்ந்த 37 வயதான நடேஷானி கீர்த்தி ராஜபக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் ரம்புக்கனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
கொடூரமாக கொலை
கடந்த 11ஆம் திகதி தனது காதலனின் வீட்டில் நடந்த விருந்துக்கு குறித்த பெண் சென்றுள்ளார்.
இதன்போது காதலனுக்கும் நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், காதலியான பெண் மண்வெட்டியால் தாக்கி கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மரணம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
