பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்க்கும் சட்டத்தரணிகள் சங்கம்
பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்டத்தரணி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கை..
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும், எந்த நபரிடமும் பொலிஸ் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி நடத்தி இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதனை தடுக்க பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
