கொத்மலை நீர்தேக்கத்தில் அடையாளம் தெரியாத நிலையில் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று(08.10.2025) மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஓயாவில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan