பல்கலை மாணவன் உயிரிழப்பு: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் இன்று (1) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
விசாரணை
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தமை குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் மன விரக்தி காரணமாக, மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
