உயர்மட்டக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உள்நாட்டு பல்கலைக்கழக கல்வியியலாளர்கள்
நடைபெற்று வரும் தேசிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் செயல்படுத்தப்படும் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு செயல்முறைகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திசையை ஆய்வு செய்யும் உயர்மட்டக் குழுவிற்கு, சர்வதேச மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழக கல்வியியலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் தலைவராக, இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கில மொழித் துறை பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரியன்வதா அபேவிக்ரம, ஜான் கொட்டலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறை பேராசிரியர் பிமலி இந்திரரத்ன, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.அறிவழகன், களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த கலாநிதி டி.ஏ.புஷ்பராஜா, மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் கே.ஏ.எச்.ஹெச்.குருப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு, தற்போதுள்ள கல்வி மதிப்பீட்டு நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு, தேசிய மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைகளை வழங்க உள்ளது.
கல்வி மறுசீரமைப்புகளின் தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam