நல்லாட்சி அரசாங்க கால வீட்டுத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமையினால் மக்கள் அதிருப்தி
நல்லாட்சி அரசாங்க காலத்தில் தெரிவு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும், இதுவரையில் இந்த அரசாங்கமோ, அரசாங்கம் சார்ந்த பிரதிநிதிகளோ எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குள் அமைந்துள்ள மகிழவட்டவான் மற்றும் நரிப்புல் தோட்ட வீட்டுத்திட்டங்களின் பயனாளிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் பல அடிக்கல் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இன்றைய தினம் (23) அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த முன்னாள் நாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கவனத்திற்கு கொண்டு வந்த குறித்த வீட்டுத்திட்டத்திங்களின் பயனாளிகள், அதனை பூரணப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னாள் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு சென்று தமக்குரிய நிதிகளை ஒதுக்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
கடந்த நல்லாட்சிக் காலத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஊடாக தமக்கான வீடுகளை நிர்மானித்துக் கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அதன் ஊடாக தாம் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருந்ததாகவும், இருந்தும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அடுத்த கட்ட நிதிகள் ஒதுக்கப்படாமையால் அவ்வீடுகளை பூரணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுமானப் பணிகளை தொடருங்கள் அரசாங்கமானது மிகுதி பணத்தினை தரும் எனும் அதிகாரிகளின் உத்தரவாதத்தினை நம்பி தமது உடமைகளை விற்றும் நகைகளை அடமானம் வைத்தும் இப்பணிகளை முன்னெடுத்தாகவும், இருந்த போதும் தமது வறுமையின் காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் அதனை முழுமையாகப் பூரணப்படுத்த முடியாமையால் தொடர்ந்தும் தமது குழந்தைகளுடன் குடிசை வீடுகளிலேயே வசித்து வருவதாகவும், இதனால் மழை காலம் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டனர்.
அத்துடன், கடந்த தேர்தலின் போது வீடுகளை பூரணப்படுத்தி தருவோம் என வாக்குறுதிகளை வழங்கி சென்ற தற்போதைய அரசாங்க தரப்பு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் முறையிட்டும் அது தொடர்பில் அவர்கள் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால் தாம் தொடர்ந்தும் தட்டிக்கழிக்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்ததோடு, இது தொடர்பில் தமக்கான வீட்டுத் திட்டங்களை வழங்கிய முன்னாள் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு சென்று தமக்குரிய நிதிகளை ஒதுக்கித்து மாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
கடந்த நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த
கோரிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான
வீட்டுத்திட்டங்கள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் பல பயனாளிகளிடம்
கையளிக்கப்பட்டதாகவும், இருந்தபோது தற்போதைய அரசாங்கமானது இறுதியாக
ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை செய்யாது கிராம சேவகர்
பிரிவிற்கு ஓரிரு வீடுகளை அமைத்துக் கொடுத்து வருவதாகவும், கடந்த அரசாங்கம்
ஆரம்பித்த வேலைதிட்டம் என்பற்காக இந்த அரசாங்கம் இப்படிப்பட்ட மக்களை பழிவாங்க
முiனையக் கூடாது என்றும், இது தொடர்பில் அரசாங்கம் சார்பான பிரதிநிதிகளும்
கவனம் செலுத்த வேண்டும் எனவும், தெரிவித்ததோடு இவ்விடயத்தினை எதிர்க்கட்சி
தலைவரின் கவனத்திற்கும் தாம் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்
உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
