யாழில் மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் குண்டுகள் மீட்பு
யாழ்.மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று பகுதிகளில் குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது.
மண்டலாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்துள்ளார்
அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில்
இது குறித்து உடனடியாக மருதங்கேணி பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மருதங்கேணி பொலிசார் விரைந்து சென்று குறித்த பகுதியை உடன் பாதுகாப்பான பகுதிக்குள் கொண்டுவந்தனர்.
காணிக்குள் காணப்பட்ட அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவை தற்போது 81-2,RPG _ 2 ,60 _ 3 ,Dompa 1 என ரக குண்டுகள் என இனங்கானப்படுள்ளன.
குறித்த குண்டுகள் நாளைய தினம் நீதிமன்ற அனுமதியின் பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
