சீரற்ற முறையில் எரிபொருள் விநியோகம்: எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் (Photos)
மன்னார் - பேசாலை காட்டாஸ்பத்திரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சீரான கியூ.ஆர் அட்டை முறையில் எரிபொருள் வழங்கப்படாமையால் கடற்தொழிலாளர்கள் பலர் வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பேசாலை - காட்டாஸ்பத்திரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை தொடக்கம் டீசலை பெறுவதற்காக வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இதன்போது பேசாலை மக்களின் பலர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்றுகூடி, தாம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எரிபொருளை கொடுக்குமாறு கோரியதையடுத்து அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு
பின்னர் குறித்த அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகை எரிபொருள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்துள்ளது.
அதிக அளவில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் இந்த பகுதியில்
எரிபொருள் தட்டுப்பாடு அதிகம் காணப்படுவதால் இது தொடர்பாக நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு கடற்தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
