பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் சடுதியான மாற்றம்
பிரித்தானியாவில் (Britain) தற்போது வேலை இல்லாதோரின் (Unemployement) எண்ணிக்கை 11 மில்லியனை தொட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொருளாதார ரீதியில் செயலிழந்தவர்களாக கருதப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிற்கு பிறகு சடுதியாக அதிகரித்துள்ளது.
குடும்ப சூழல், நோய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக பலர் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறப்படுகின்றது.
உளவியல் பயிற்சி
மேலும், இவர்களில் 1.7 மில்லியன் மக்கள் போதியளவு ஊதியம் இன்மையால் வேலை வாய்ப்புகளை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலைமையை சரி செய்ய வேலைக்கு செல்லாமல் இருப்பவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எனினும், இதற்கு மருத்துவமனையை வேலை வாய்ப்புக்கு தயார்படுத்தும் மையமாக மாற்றுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam