எம்மில் பலரும் கூலி வேலை செய்பவர்களே! வேலையில்லா பட்டதாரிகள் ஆதங்கம்!
எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர் என வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நேற்று(20.01.2025) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
பல்வேறுபட்ட திணைக்களங்களில் வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசாங்கத்தினதே ஆகும்.
எம்மால் கடந்த முறை சுத்திகரிப்பு தொழிலாளர் வேடமிட்டு போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் சமூக ஊடகங்களில் எமக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்தனர். எமக்குள்ளும் பல கூலி தொழிலாளிகள் இன்று காணப்படுகின்றனர். எமது பெற்றோர்களும் பல கூலி தொழில்களை முன்னெடுத்து வியர்வை சிந்தியே இந்த இடத்திற்கு எம்மை கொண்டு வந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |