யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(23.06.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்ப்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன், வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும். அதனால் வேலை வாய்ப்புக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக வியாழக்கிழமை காலை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
தீர்வுகள் கிடைக்க பெறாவிட்டால் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam