இலங்கையில் கிராமமொன்றை அச்சுறுத்தும் ஆடையில்லா நபர் - அச்சத்தில் பெண்கள்
இரத்தினபுரியில் ஆடையின்றி மக்களை அச்சுறுத்தும் மர்ம நபரால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளத்துறை மற்றும் எல்லகேவத்தை பிரதேசத்தில் உள்ள பல வீடுகளுக்குள் ஆடையின்றி பிரவேசிக்கும் திருடனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குறித்த நபர் ஆடையின்றி பல வீடுகளை உடைத்து பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடனின் காட்சிகள்
வீடு ஒன்றின் பாதுகாப்பு கமெராவில் திருடனின் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதிகாலையில் வீடொன்றின் சமையலறைக்குள் புகுந்த இந்த நபர் அங்கிருந்த இளம் பெண்ணை பயமுறுத்தியுள்ளார்.
ஆடையில்லா நபர்
அவரது பிள்ளை திருடனை தாக்கிய நிலையில் வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தவுடன் ஆடையின்றி இருந்த திருடன் தப்பியோடியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களாக இடம்பெற்று வரும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.