வெளிநாடுகளில் தலைமறைவாக வாழும் பாதாள உலகக்குழு தலைவர்களுக்கு ஆபத்து
வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 164 பாதாள உலகக்குழு தலைவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேகநபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை
வெளிவிவகார அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை எதிர்வரும் மாதங்களில் நடைமுறைப்படுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களமும் வெளிவிவகார அமைச்சும் கூட்டாக இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலம் பாதாள உலகக் குழுத் தலைவர்களான கஞ்சிபானை இம்ரான், லொகு பெட்டி, ரொட்டம்பே அமில உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள் பெலாரஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவிதமாக டுபாய், பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக்குழுத் தலைவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |