கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின
அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற 'கிளப் வசந்த' மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியில் இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் விவரம் கீழே,
01- பெயர் - தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்கா
தேசிய அடையாள எண் - 951350753V
02- பெயர் - பதி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது சண்டி
தேசிய அடையாள அட்டை எண் - 199207801772
முகவரி - இல. 655/A மகும்புர, அஹுங்கல்ல
03- பெயர் - முத்துவடுர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது ஜெனி
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
குற்றப்பிரிவு மேல் மாகாண தெற்கு - 072-4222223
நிலைய அதிகாரி, அதுரிகிரிய பொலிஸ் நிலையம் - 071-8591657 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
