அமெரிக்காவின் அரசியல் மாற்றத்தை கணித்த ஆவிகளுடன் பேசும் நபர்
புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஆவிகளுடன் பேசும் பிரித்தானியர் ஒருவர் அமெரிக்க (US) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆவிகளுடன் பேசுபவர் என தெரிவிக்கப்படும் கிரேக் ஹாமில்டன் - பார்க்கர் (Craig Hamilton-Parker) என்னும் நபர் உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவும் நிலையில், ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போர் தொடர்பில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.
மேலும், கமலா ஹாரிஸ் (Kamala Harris) எடுக்கும் முடிவுகள் அவரை பலவீனமானவராக காட்டும். அதைப் பயன்படுத்திக்கொண்டு ட்ரம்ப் தன்னை வலிமையானவராக முன்னிறுத்தி ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அத்துடன், ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, இந்திய அல்லது ஆபிரிக்க வம்சாவளியினரான ஒரு பெண் அவருக்கு உதவுவார் என்று கூறியுள்ளார்.

அதேவேளை, ”முதலில், அந்தப் பெண், வர்ணனையாளரான கேண்டஸ் ஓவன்ஸ் ஆக (Candace Owens) இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், அது ட்ரம்ப்பின் ஆதரவாளரான ஜே.டி.வான்ஸின் (J. D. Vance) மனைவியான உஷாவாக இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் களத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நபர் வெளியிட்டுள்ள தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri