பாதாள உலகக் குழுவினருடன் அநுர அரசாங்கத்திற்கும் தொடர்பு! நாமலுக்கு கிடைத்த செய்தி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பல்களுக்கு அரசாங்கம் உதவி செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அரசாங்கத்திற்கு ஆட்சியை தொடர முடியாது
நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாடம் படிப்பிக்க மேசை - கதிரை கொண்டுவர சொன்ன அரசாங்கத்திற்கு நான் ஒன்றும் குறிப்பிட விரும்பவில்லை. அவர்களின் கட்சி உறுப்பினர்கள் கடத்தப்படுகின்றனர். அதிகாரம் அவர்களிடமே இருக்கிறது. எதுவும் செய்ததாக தெரியவில்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு முடியாது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது இவர்களுக்கு ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்றார்.
