பாதாள உலகக்குழு உறுப்பினர் சூட்டிமல்லி துபாயில் கைது
இலங்கையின் முக்கிய பாதாளக் குழு உறுப்பினர்களில் ஒருவரான சூட்டி மல்லி என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய் பொலிஸார் அவரை நேற்று(30.12.2025) கைதுச் செய்துள்ளனர்.
அதே சமயம், இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
கந்தானைப் பிரதேசத்தில் சிறிது காலத்துக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் மற்றும் அவரது மைத்துனர் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் காயமடைந்து, அவரது மைத்துனர் உயிரிழந்திருந்தார்.
மேற்குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் “கொண்ட ரஞ்சி” என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பின்னர் கொண்ட ரஞ்சி மற்றும் அவரது சகாக்கள் ஒருவர் பின் ஒருவராக துபாய்க்குத் தப்பிச் சென்று அங்கு தலைமறைவாகியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கொண்ட ரஞ்சியின் முக்கிய சகாக்களில் ஒருவரான சூட்டி மல்லி துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.