துபாயில் போலி அடையாளங்களுடன் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்கும்பல் தலைவர்கள்
இலங்கையின் முக்கிய பாதாள உலகக்கும்பல் தலைவர்கள் துபாயில் போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இலங்கையில் இருந்து படகு வழியாக இந்தியா சென்று அங்கிருந்து போலி ஆவணங்கள் மூலமாக துபாய் செல்லும் இலங்கையின் பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்கள், அங்கு போலி ஆவணங்களை உருவாக்கிக் கொண்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஹெரோயினுடன் கைது
அந்த வகையில் கணேமுல்லை சஞ்சீவவின் சகாக்களில் ஒருவரான அலயா என்றழைக்கப்படும் லஹிரு நவோத பெரேரா என்பவர் மிக அண்மையில் துபாய்க்கு சென்றடைந்து அங்கிருந்து பாதாள உலகச்செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
துபாயில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக அவர் சஜித் பிரசன்ன விக்ரமஆரச்சி எனும் போலிப் பெயரில் ஆவணங்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அலயா எனப்படும் லஹிரு நவோத பெரேரா, கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 07ம் திகதி கம்பஹாவில் வைத்து மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்புப்பிரிவினரால் பத்து கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
படுகொலை
அதன் பின்னர் 2022.08.24ம் திகதி கொடுகொட பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தகப்பனான வர்த்தகர் ஒருவரை படுகொலை செய்வதற்கு ஒத்தாசையாக இருந்த குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மாதம் கம்பஹா வெலிவேரிய பிரதேசத்தில் கொலைமுயற்சியொன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அதே போன்று கடந்த ஜுலை 21ம் திகதி கொள்ளுப்பிட்டி இரவு விடுதியொன்றில் தெமட்டகொட சமிந்தவின் சகோதரன் தெமட்டகொட ருவனை கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியிருந்தபோதும் இரவு விடுதியின் பாதுகாவலர்களால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பாதாள உலகப்புள்ளிகள் இலங்கையை விட்டு இலகுவாகத் தப்பிச் செல்வதற்கு ஒருசில பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அனுசரணை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 11 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 20 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
